'அர்ஜூன் ரெட்டி' படத்தின் மூலம் தெலுங்கு சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.
இதனையடுத்து இவர் நடிப்பில் வெளியான 'கீதா கோவிந்தம்' படத்தில் 'இங்கெ இங்கெ இங்கெ காவலி' பாட்டின் மூலம் இவருக்கு அதிக ரசிகைகள் கிடைக்க ஆரம்பித்தனர். 'நோட்டா' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் நிற்க ஆரம்பித்தார். இப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. சமீபத்தில் வெளியான 'டியர் காம்ரேட்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது.
இப்படி இளைஞர்களை கவரும் விதத்தில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா, தற்போது படத்தைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்.
விஜய் தேவரகொண்டா தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு 'கிங் ஆஃப் தி ஹில்' எனப் பெயரிட்டு முதல் படமான 'மீக்கு மாத்ரமே செப்தா (MeekuMaathrameCheptha )' என்ற தலைப்பில் தயாரிக்க உள்ளார். இயக்குநர் தருண் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார்.
-
Launching the man who launched me into the world of Telugu Cinema Herodom 😀🤘🏼
— Vijay Deverakonda (@TheDeverakonda) August 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Launching an all new Director, Music Director, Cameraman, set of actors package 💪
Giving you my loves a laughriot for all the smiles you've given me ❤#MeekuMaathrameCheptha #KingOfTheHill pic.twitter.com/qQOoZuGanc
">Launching the man who launched me into the world of Telugu Cinema Herodom 😀🤘🏼
— Vijay Deverakonda (@TheDeverakonda) August 29, 2019
Launching an all new Director, Music Director, Cameraman, set of actors package 💪
Giving you my loves a laughriot for all the smiles you've given me ❤#MeekuMaathrameCheptha #KingOfTheHill pic.twitter.com/qQOoZuGancLaunching the man who launched me into the world of Telugu Cinema Herodom 😀🤘🏼
— Vijay Deverakonda (@TheDeverakonda) August 29, 2019
Launching an all new Director, Music Director, Cameraman, set of actors package 💪
Giving you my loves a laughriot for all the smiles you've given me ❤#MeekuMaathrameCheptha #KingOfTheHill pic.twitter.com/qQOoZuGanc
இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷாமீர் சுல்தான் இயக்குகிறார். மதன் குணாதேவா ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகளும் படத்தின் கதாநாயகி, தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் தருண் விஜய் தேவரகொண்டாவை ஹீரோவாக வைத்து 'பெல்லி சூப்புலு' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.