தெறி, மெர்சல் படங்களின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லீ வெற்றி கூட்டணி அமைத்துள்ளனர். சென்னையை சுற்றி இப்படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பெயரிடப்படாத நிலையில் தற்போது விஜய் 63 என்று கூறப்பட்டு வருகிறது. விளையாட்டு போட்டியை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் நயன்தாரா, கதிர், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், விவேக் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறது. தற்போது எஸ்.ஆர்.எம் கல்லூரியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய்யை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக இரும்பு வேலி சரிந்து கீழே விழுந்தது. இந்நிலையில் பதறிப்போன விஜய், ஓடிச்சென்று ரசிகர்களை காப்பாற்றினார். அப்போது எடுக்கப்பட்ட காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து விஜய் 63 படத்தில் நயன்தாரா நடிப்பது குறித்த அப்டேட்கள் எதுவும் வெளிவராமல் இருந்தன. இந்நிலையில் நயன்தாராவுக்கு படத்தின் முதல் காட்சியே விஜய்கும் -நயன்தாராவிற்கும் திருமணம் நடப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இந்த திருமண காட்சி பிரபல சர்ச்சில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் நயன்தாராவிற்கும் வரும் முதல் காட்சியே சர்ச்சில் திருமணம் நடப்பது போன்றுதான் இருந்தது. அதே சென்டிமென்ட் காட்சி இதிலும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.