ETV Bharat / sitara

எனது கனவு நிஜமானது...! - விக்னேஷ் சிவனின் பேன் பாய் மொமண்ட் - இயக்குநர் விக்னேஷ் சிவன்

வருகிற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் களம் காணவிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான காணொலி ஒன்றை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். தோனியின் தீவிர ரசிகரான விக்னேஷ் சிவன், தனது 'Fan boy Moment'-ஐ உருக்கமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எனது கனவு நிஜமானது..! - விக்னேஷ் சிவன் உருக்கமான பதிவு

author img

By

Published : Feb 21, 2022, 12:36 PM IST

Updated : Feb 21, 2022, 12:59 PM IST

2012இல் வெளியான 'போடா போடி' திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் விக்னேஷ் சிவன். 'நானும் ரௌடி தான்’, 'தானா சேர்ந்த கூட்டம்', ’பாவக் கதைகள்’ போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். 'மாஸ்டர்' உட்பட பலத் திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார்.

இந்நிலையில், வருகிற ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு பிரத்யேகக் காணொலி ஒன்றை இயக்குவதற்கு விக்னேஷ் சிவனிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தோனியின் தீவிர ரசிகரான விக்னேஷ் சிவன், அந்தக் காணொலியில் தோனியை இயக்கிய அனுபவத்தை உருக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எனது கனவு நிஜமானது..! - விக்னேஷ் சிவன் உருக்கமான பதிவு
எனது கனவு நிஜமானது..! - விக்னேஷ் சிவன் உருக்கமான பதிவு

தோனியின் மானசீக மாணவன் நான்

அதில், ”பல வருடங்கள் முன்பு, காவலரான எனது தாயார் ஐபிஎல் போட்டிகளுக்குப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார். அந்த காலகட்டத்தில் அவர், காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அப்போது அவர், பிராவோவிடம் தமிழில் பேசுவதையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் பார்க் ஷ்ரெடான் ஓட்டலின் ஓரத்தில் என் உத்வேக நாயகனான தோனியை சில வினாடிகளாவது பார்த்துவிடாலம் என அங்கு காத்துக்கிடக்க எனது தாயாரிடம் அனுமதி கேட்பேன்.

என் வாழ்நாள் முழுவதும் நான் அவரைப் பின்பற்றியிருக்கிறேன். ஒரு ரசிகனாக மட்டுமல்லாமல் மானசீக மாணவனாகவும் கூட. எனது கஷ்டமான சூழ்நிலைகளில், நெருக்கடியானப் படப்பிடிப்பு வேலைகளில், என அனைத்து கஷ்டமான நேரத்திலும் நான் யோசிப்பது தோனி இதை எப்படி சமாளித்திருப்பார் என்ற கோணத்தில்தான். அதே கோணத்தில் நானும் அந்தப் பிரச்சனையை அணுகப் பார்ப்பேன். 100 பேர் கொண்ட குழுவை வழிநடத்த பெறும் தலைமைத் தகுதி வேண்டும். அதற்கு நான் என் ஆதர்ச நாயகனான தோனியையே பின்பற்றுகிறேன்.

என் பலநாள் கனவு நிறைவேறியது

இன்று எனது வாழ்க்கையில், எனது அன்பிற்குறியவர்களின் பிராத்தனைகளால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு சிறிய காணொலி ஒன்றை நான் இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என் ஆதர்ச நாயகனான தோனியை இயக்கும் இந்த வாய்ப்பில் 36 முறை ஆக்‌ஷன் சொன்னேன். சொன்ன ஒவ்வொரு ஆக்‌ஷனையும் சிறு பிள்ளை போல எண்ணிக் கொண்டேன். அதை ஒவ்வொரு முறை சொல்லும் போதும் கடவுளுக்கும், பிரபஞ்சத்திற்கும் நன்றி தெரிவித்தேன்.

படப்பிடிப்பு இடைவேளியில், அவரிடம் என் தாயின் புகைப்படத்தை காண்பித்தேன். பின்னர் அவரை நேரிலும் படப்பிடிப்புத் தளத்திற்கு வரவழைத்து சந்திக்க வைத்தேன். என் வாழ்நாளில் நான் கண்ட மிகப்பெரும் கனவு நிஜமானது” எனத் தெரிவித்தார். இவரது இப்பதிவைக் கண்ட பல திரைப் பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க:இயக்குநர் சங்கத் தேர்தல் : இமயம் அணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

Last Updated : Feb 21, 2022, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.