'நானும் ரௌடி தான்' படத்திலிருந்து இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்துவரும் செய்தி அனைவரும் அறிந்த ஒன்றே. இருப்பினும் திருமணம் குறித்து இன்னும் இருவரும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இருவரும் அடிக்கடி வெளியே சுற்றும்போது எடுக்கும் புகைப்படங்கள், காணொலிகளை மட்டும் இயக்குநர் விக்னேஷ் சிவன் #loveisintheair எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுவருகிறார்.
எப்போதும் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாகச் செயல்படும் இயக்குநர் விக்னேஷ் சிவன் அவ்வப்போது தனது ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
![இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12284420_nayan.jpg)
அந்தவகையில் நேற்று (ஜூன் 27) விக்னேஷ் சிவன் ரசிகர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது ஒருவர், 'நயன்தாராவை ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதைத் தெரிந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறேன்' எனப் பதிவிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த விக்னேஷ் சிவன், 'ரொம்ப செலவு ஆகும். கல்யாணம் மற்ற அனைத்திற்கும். அதனால் பணத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். கரோனா தொற்று முடிவதற்காகவும் காத்திருக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார். அவரின் இப்பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: விரைவில் திரையில் "சினம்"