ETV Bharat / sitara

'என்னுடைய வருங்கால குழந்தைகளின் அம்மாவுக்கு' - நயன்தாரா குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்! - காதலை வெளிப்படுத்திய விக்னேஷ் சிவன்

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா கையில் ஒரு குழந்தை வைத்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா
நயன்தாரா
author img

By

Published : May 11, 2020, 6:26 PM IST

சர்வதேச அன்னையர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்கள் அம்மாக்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு, வாழ்த்து தெரிவித்தனர். சிறு வயதில் எடுத்த புகைப்படம் தொடங்கி லேட்டஸ்ட் புகைப்படங்கள் வரை ஷேர் செய்தனர்.

இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா கையில் ஒரு குழந்தை வைத்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, தனது காதலை மறைமுகமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதில், 'என் வருங்கால குழந்தைகளின் அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார். இப்புகைப்படம் மூலம் அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள புகைப்படம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிக்கு வாய்ப்பு அளிக்கும் விஜய்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.