சினிமாவில் கவர்ச்சி என்றால் தற்போதைய காலகட்டத்தில் அரைகுறை ஆடை அணிவது என்றே பலரும் எண்ணலாம். ஆனால் 80-களில் தனது காந்தக் கண்களால் கவர்ச்சிக்காட்டி இளைஞர்களை கவர்ந்தவர்தான் நடிகை சில்க் ஸ்மிதா. 1980ஆம் ஆண்டு வண்டிச்சக்கரம் என்னும் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான சில்க் ஸ்மிதா, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
![silk smitha](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4726079_smitha.jpg)
சுமார் பதினேழு ஆண்டு காலம் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த சில்க், தனது சொந்த வாழ்வில் எடுத்த தவறான முடிவால் 1996ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். சில்க்கின் மறைவிற்கு பின் பல கவர்ச்சி நடிகைகள் வந்தாலும் அவரது இடத்தை ஒரு நடிகையாலும் இன்றுவரை முழுமையாக நிரப்ப முடியவில்லை. காரணம் சில்க் கவர்ச்சி மட்டுமின்றி நடிப்பு, நடனம் என அனைத்திலும் சிறந்து விளங்கினார். அதுமட்டுமல்லாது ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
![silk smitha](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4726079_silk.jpg)
அவர் உலகை விட்டு மறைந்தாலும் இன்றளவும் 80, 90களைச் சேர்ந்த ரசிகர்களுக்கு சில்க் என்று கூறினாலே ஒரு தனி கிக் இருக்கத்தான் செய்கிறது. இந்த ரசிகர்கள் சில்க் மீண்டும் வரக்கூடாதா என்றே ஏங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் சில்க் போன்ற உருவம் கொண்ட பெண் ஒருவரின் காணொலி இணையத்தில் பரவிவருகிறது.
-
சிலுக்கு 😍😍 pic.twitter.com/cIaGRpikWV
— ⭐கருப்பு மன்னன்⭐️ (@yaar_ni) October 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">சிலுக்கு 😍😍 pic.twitter.com/cIaGRpikWV
— ⭐கருப்பு மன்னன்⭐️ (@yaar_ni) October 10, 2019சிலுக்கு 😍😍 pic.twitter.com/cIaGRpikWV
— ⭐கருப்பு மன்னன்⭐️ (@yaar_ni) October 10, 2019
ஆம் உருவத்தில் அச்சு அசலாக சில்க்கை போன்று இருக்கும் அந்தப் பெண் சில்க்கின் பாடல்களான 'பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம்', 'அடியே மனம் நில்லுனா நிக்காதடி' போன்ற பாடல்களை டிக்-டாக் செய்துள்ளார். இதைக் கண்ட சில்க் ரசிகர்கள் பலரும் காணொலியை வைரலாக்கத் தொடங்கிவிட்டனர்.