இது தொடர்பாக விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “எங்கள் நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றிய ரம்யா பல வருடங்களாக வங்கிக் கணக்குகளை முறைகேடாகப் பயன்படுத்தி 45 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளார். இந்த விஷயம் கடந்த ஜூன் 30ஆம் தேதி கண்டறியப்பட்டு அங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதன் காரணமாக ரம்யா கடந்த ஜூன் மாதத்திலிருந்து நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நிறுவனம் தொடர்பான கணக்கு தொடர்பாக இனி அவரை தொடர்புகொள்ள வேண்டாம் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மீறி ரம்யாவை தொடர்புகொண்டால் எந்த வகையிலும் நிறுவனம் பொறுப்பல்ல என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...இருமுறை கைவிடப்பட்ட தரையிறங்கும் முயற்சி... 3ஆவது முறை நிகழ்ந்த பெரும் விபத்து!