ETV Bharat / sitara

தமிழ் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது! - 450 films

தமிழில் பல திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு இன்று பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

தமிழ் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது!

author img

By

Published : Mar 28, 2022, 9:21 PM IST

இந்தியாவின் பல்வேறு துறைகளில் சாதித்த சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. அந்தவகையில் 2022ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் இதில் இடம்பெற்றனர்.

பல தமிழ் திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (மார்ச் 28) நடைபெற்ற விழாவில், சங்கரமாஞ்சி ஜானகிக்கு (சௌகார் ஜானகி) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தார். கலைத்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்ததற்காக சௌகார் ஜானகிக்கு விருது வழங்கப்பட்டது.

  • President Kovind presents Padma Shri to Smt Sankaramanchi Janaki for Art. Known as Sowcar Janaki, she is a versatile film actress, TV, voice, radio and stage artist performing in over 450 films in Tamil, Telugu, Kannada, Malayalam and Hindi in her career spanning 70 years. pic.twitter.com/gSsF6dlcm3

    — President of India (@rashtrapatibhvn) March 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சௌகார் ஜானகி திரைப்பட நடிகை, மேடைக் கலைஞர் எனப் பன்முகத் திறமை கொண்டவர். 70 ஆண்டுகால வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழ் நடிகர் நாசருக்கும் பத்ம ஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆஸ்கர் விருதுகள் 2022: சிறந்த திரைப்படம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.