ETV Bharat / sitara

மாற்று சாதி காதலை எதிர்க்கும் மனநோயளிகளை தோலுரிக்கிறது 'கன்னிமாடம்' - திருமாவளவன் - கன்னிமாடம் படம் பற்றி திருமாவளவன் கருத்து

சாதி விட்டு சாதி காதல் மலர்வது என்பது சமூகத்தின் இயங்கியல் போக்கில் இயல்பானது. அதை எதிர்க்கக் கூடியவர்கள் எப்படியான மனநோயாளிகள் என்பதை கன்னிமாடம் படம் காட்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.

Kanni maadam movie
Thirumavalan praises Bose venkat's directorial Kanni maadam movie
author img

By

Published : Feb 27, 2020, 4:50 PM IST

சென்னை: 'கன்னிமாடம்' படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த விசிக தலைவர் தொல். திருமாவளவன் படம் குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கன்னிமாடம்'. இந்தப் படத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் காண்பதற்கு சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் கன்னிமாடம் படத்தைப் பார்த்த திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: “சாதி, மத வன்முறை தலைகுனிய வைக்கக் கூடிய அளவுக்கு இன்று பெருகி வருகிறது. பெரியார், அம்பேத்கர் சிந்தனையை கொண்டு சேர்க்கும் படம் கன்னிமாடம்.

சாதி விட்டு சாதி காதல் மலர்வது என்பது சமூகத்தின் இயங்கியல் போக்கில் இயல்பானது. அதை எதிர்க்கக் கூடியவர்கள் எப்படியான மனநோயாளிகள் என்பதை இப்படம் காட்சிப்படுத்துகிறது.

இந்தப் படத்துக்கு விருது கிடைக்கவேண்டும். அப்படி கிடைக்காவிட்டாலும் சமூக மாற்றத்தை உருவாக்கும் படமாக அமைந்துள்ளது. இன்றைய திரைப்படங்கள் சமூக உரையாடலை உருவாக்குகிறது. பெரியார் இன்றும் தேவைப்படுகிறார்” என்றார்.

'திரெளபதி' படத்தின் ரிலீஸுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது பற்றி கேள்வி எழுப்பியபோது, கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறினார்.

Thirumavalan praises Bose venkat's directorial Kanni maadam movie

தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற வன்முறை குறித்து பேசிய அவர், “பாஜக ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறோம். டெல்லியில் அறவழியில் போராடியவர்கள் மீது மதவெறி கும்பல் தாக்குதல் நடத்தி வன்முறையை உருவாக்கியுள்ளனர். டெல்லியில் நடக்கும் சம்பவம் கவலை அளிக்கும் விதமாக உள்ளது” என்றார்.

ஸ்ரீராம் கார்த்திக், சாயா தேவி என புதுமுகங்கள் நடித்திருக்கும் 'கன்னிமாடம்' திரைப்படம். மதுரை அருகேயுள்ள மேலூரை கதைக்களமாகக் கொண்டு காதல், சாதி, எமோஷன் கலந்த கலவையாக படம் அமைந்துள்ளது. கடந்த வாரம் வெளியான இப்படம், நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: 'திரைப்படங்கள் ஏற்படுத்தும் உரையாடல்களால் புரட்சிகரமான மாற்றம் ஏற்படுகிறது' - திருமாவளவன் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.