ETV Bharat / sitara

'இன்னும் நூறு வருடமாவது வாழும் மகேந்'திறன்' - நடிகர் பார்த்திபன் - director mahendran

முள்ளும் மலரும் படத்தின் மூலம் மக்களை கவர்ந்த இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு நடிகர் பார்த்திபன், இயக்குநர் வசந்த பாலன் இரங்கல் தெரிவித்தனர்.

இயக்குநர் மகேந்திரன்
author img

By

Published : Apr 2, 2019, 1:21 PM IST

திரைக்கு பின்னால் ஒளிந்துகொண்டு ரசிகர்களின் ரசனைக்கேற்ற படைப்பை தந்தவர் இயக்குநர் மகேந்திரன். இவர் படத்தில் வரும் வசனங்கள் தூங்கிக் கிடக்கும் மனிதனையும் சிந்திக்க வைக்கும். இவரது கதைதான் அவருக்கு பிரமாண்டம். கதைகளின் கவிஞன், காதலன், முற்போக்கு சிந்தனையாளன். மேலும் தனது ஆழமான கருத்தை திரை வடிவில் இலக்கியம் படைத்துள்ளார். இவர் இயக்கிய 12 படங்களும் பன்னிரண்டு காவியங்களாகும்.

Director mahendran
இயக்குநர் மகேந்திரன்

இந்நிலையில், இவர், இன்று காலை சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அவரது வீட்டில் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே, இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு நடிகர் பார்த்திபன், இயக்குநர் வசந்த பாலன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதில், 'முள்ளும் மலரும் மரணம்? இன்னும் நூறு வருடமாவது வாழும் மகேந்'திறன்', பலரின் மரணம் வருத்தமளிக்கும். சாகுறவரைக்கும் சாதிக்கலையேன்னு..... ஆனால் மகேந்திரன் சாரின் புகழ் இன்னும் நூறு வருடங்கழித்தும் சாகாது'... என பார்த்திபன் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இயக்குநர் வசந்தபாலன் இரங்கல் தெரிவித்து தனது முகநூல் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதில், "சமரசமில்லாத கலைஞன் இயக்குநர் மகேந்திரன். தன் படைப்புகள் மட்டும் பேசப்பட்டால் போதும் என்று ஆர்ப்பாட்டமில்லாமல் சுயபெருமை பேசாமல், அவர் படங்களில் காணக்கிடைக்கும் அமைதியை போல வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். அவரிடம் இருக்கும் நிதானம், அர்த்தமிக்க அமைதி, முதிர்ச்சி அவரது படங்களில் பிரதிபலிக்கும்.அவர் இழுத்து சென்ற தேர் அதே இடத்தில் அதன் தரிசனம் குறையாமல் ஒளி வீசிய வண்ணம் இருக்கிறது.

தங்கப்பதக்கம் திரைப்படம் அதன் வசனத்திற்காகவும் உரத்த கதை கூறலுக்காகவும் நினைவு கூறப்பட்ட திரைப்படம். அந்த திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதிய மகேந்திரனின் திறமையை பாராட்டி அவருக்கு திரைப்படம் இயக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. மிக குறைவான வசனங்கள் உள்ள, திரைமொழிக்கு முக்கியத்துவமுள்ள முள்ளும் மலரும் திரைப்படத்தை இயக்குகிறார். அங்கு தான் அவரின் கலைத்தன்மை மேலெழுந்து நிற்கிறது.

இன்றும் அவர் படங்கள் அதன் ஸ்திரத்தன்மையை இழக்காமல் காலத்தை எதிர்த்து நிற்கின்றன. காளி என்கிற கதாபாத்திரம் நடிகர் ரஜினி அவர்களை பேட்டை வரை பின் தொடர்கிறது என்றால் எத்தனை வலிமையான கதாபாத்திர வடிவமைப்பு. அவரின் படங்கள் காலம் மூர்க்கமாக வீசுகிற அலைகளுக்கு முன் துருவேறாமல் அப்படியே நிற்கின்றன. ஒரு கலைஞனின் இடையறாத ஆசையும் கனவு அது தானே. தன் கனவு மெய்ப்பட்டதை கண்ட கலைஞன். நிறைவான பயணம். சென்று வாருங்கள் சார்" ... என்று தெரிவித்தனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.