ETV Bharat / sitara

'உங்களுக்கு ஏன் இந்த மட்டம் தட்டும் கீழ்த்தரமான எண்ணம்' - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி - varane avashyamund face book

'வரனே அவஷ்யமுண்டு' படத்தின் சர்ச்சை காட்சி தொடர்பாக, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தனது ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

sureshkamachi
sureshkamachi
author img

By

Published : Apr 28, 2020, 5:22 PM IST

இயக்குநர் அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் 'வரனே அவஷ்யமுண்டு'. இப்படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், ஷோபனா, சுரேஷ் கோபி, மேஜர் ரவி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சமீபத்தில் இப்படம் டிஜிட்டலில் வெளியிடப்பட்டது.

இதில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு 'பிரபாகரன்' எனப் பெயர் வைத்த காட்சி இடம் பெற்றுள்ளது. இந்தக் காட்சியை வைத்து சமூக வலைதளத்தில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மேலும் அந்தக் காட்சியை படக்குழு நீக்க வேண்டுமெனவும் சில அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர்.

இந்தக் காட்சி தொடர்பாக துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது தரப்பு நியாயத்தை விளக்கி, மன்னிப்புக் கடிதம் ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், 'இல்லாத பெருவலியில் இருப்பவர்கள் நாங்கள். எங்களை வழிநடத்திய தமிழ்த் தலைவரை கண் காணாது தவித்திருக்கிறோம். தமிழர்கள் எங்களின் பாதுகாப்பு அரணை, மரியாதையை, காவலனை எங்கே தேடிக் கண்டடைவோம் என கவலை கொண்டிருக்கிறோம்.

பிரபாகரன் என்பது வெறும் பெயரல்ல. அது எம் ஒட்டுமொத்தத் தமிழர்களின் உயிருக்கு நிகர். அந்தப் பெயரைச் சொல்லும்போதே எங்கள் உணர்வுகளில் மின்சாரம் பாயும். அதெல்லாவற்றையும் இளக்காரமாக்கும் தொனியில் 'வரனே அவஷ்யமுண்டு' என்ற மலையாளப் படத்தில் கேவலமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

பாண்டி என்றழைத்துக் கேவலப்படுத்துவதும், திருடர்கள் என்று காட்சிப்படுத்துவதும் மலையாளத் திரையுலகினரின் கீழ்த்தரமான படமாக்கல். இது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது. அனைத்து மலையாளப் படங்களும் தமிழ்நாட்டிலும் வெளியாகத்தான் செய்கிறது.

1988ல் 'பட்டண பிரவேஷம்' என்ற படத்தில் காமெடியாக பிரபாகரன் பெயரை அலட்சியமாகப் பயன்படுத்தியுள்ளனர். அந்த படத்தின் இயக்குநர் 'வரனே அவஷ்யமுண்டு' படத்தின் இயக்குநர் அனூப் சத்யனின் தந்தை. வளர்ப்பு அப்படி. அதுதான் அந்தக் கேடுகெட்ட மகன் அப்படியொரு காட்சியை மீண்டும் பயன்படுத்தியிருக்கிறார்.

அந்தக் குடும்பம் தொடர்ந்து, நம் தலைவரை அண்ணனை அவமானப்படுத்தும் போக்கை கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாகக் கடத்திக் கொண்டு வருகின்றனர். நாங்கள் எங்கள் படத்தில் கேரளாவில் நீங்கள் மதிக்கும் தலைவர்களின் பெயரை பன்றிக்கு வைத்தால் பொறுத்துக் கொள்வீர்களா? கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை கொண்டாடி வருகிறோமே. உங்களுக்குள் மட்டும் ஏன் இந்த மட்டம் தட்டும் கீழ்த்தரமான எண்ணம் நடந்துகொண்டே வருகிறது?

உணர்வுள்ள தமிழர்களாய் நாங்கள் செயல்படும் நேரம் தொடங்கிவிட்டது. இனியும் பொறுத்துக் கொள்ளும் அளவு அமைதியாக இருக்கப் போவதில்லை. அந்தக் காட்சியை தயாரிப்பாளர் துல்கர் சல்மான் நீக்க வேண்டும். அதேசமயம் துல்கர் மன்னிப்பு கேட்டது சரியல்ல. இயக்குநர் அனூப்பும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.