'சந்திரலேகா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், 19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
பின்னர், ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை அதே ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் வனிதா. ஆனால், அந்தத் திருமணமும் 2010ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இதனிடையே, இயக்குநர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொள்ளப் போவதாக வனிதா சமீபத்தில் அறிவித்தார்.
இந்நிலையில், அவரின் மறுமணம் இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் கிறிஸ்தவ முறைப்படி மிகவும் எளிமையாக நடந்து முடிந்துள்ளது.
வெள்ளை நிற உடையில் வனிதா உடையணிய, பீட்டர் கோட்சூட் அணிந்திருந்தார். இருவரும் மோதிரம் மாற்றியக் கையோடு, முத்தமிட்டு கொள்ளும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிறது. வனிதா தனது பெற்றோர்களின் திருமண நாளிலேயே, தனது மூன்றாவது திருமணத்தை செய்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'அடுத்த ஆண்டு திருமணம் செய்ய இருந்தார்' - சுஷாந்தின் தந்தை உருக்கம்