நடிகர் அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘வலிமை’. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்தில் இசையமைத்துள்ளார். அஜின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கரோனா 2ஆவது அலை காரணமாக வெளியிடப்படவில்லை.
இதனால் அஜித் ரசிகர்கள் சென்னை வந்த பிரதமர் மோடி, பரப்புரைக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் மேட்ச் என எங்கு பார்த்தாலும் வலிமை அப்டேட் எப்போ? என்று தொடர்ந்து கேட்டுவருகின்றனர்.
இந்நிலையில் 'வலிமை' படத்தின் அப்டேட், கரோனா ஊரடங்கில் தளர்வுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 25) நிறைவடைந்தவுடன், சில நாள்களில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மிகப் பிரமாண்டமாக வெளியிட போனிகபூர் முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குஷியான தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதனை ட்ரெண்ட் செய்து கொண்டாடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ’ஹிட் கொடுக்கலனா என்ன இப்போ? கதை ஓகே’ - காஜல் அகர்வால் பளீச்