ETV Bharat / sitara

வியாழக்கிழமை சென்டிமென்ட்.... ஏகே ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

author img

By

Published : Dec 30, 2021, 12:37 PM IST

Updated : Dec 30, 2021, 2:32 PM IST

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' படத்தின் ட்ரெய்லர் இன்று (டிசம்பர் 30) மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ajithkumar
நடிகர் அஜித்

Valimai trailer Release : நடிகர் அஜித் நடிப்பில் ஹச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், 'வலிமை'. போனி கபூர் தயாரித்துள்ள இதில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 2022 ஆம் ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு வெளியாகிறது.

'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் க்ளிம்ப்ஸ், மோஷன் போஸ்டர், இரண்டு சிங்கிள், விசில் தீம் அனைத்தும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. என்ன தான் இவை அனைத்தும் வெளியானாலும் படத்தின் ட்ரெய்லரை வெளியீட்டை அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் 'வலிமை' படம் வெளியாக சில வாரங்களே உள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதன்படி படத்தின் ட்ரெய்லர் வியாழக்கிழமை இன்று (டிசம்பர் 30) மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை கேட்ட அஜித் ரசிகர்கள் #valimaiupdate என்ற ஹேஷ்டாக் உருவாக்கி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். அஜித் படம் தொடர்பான அப்டேட் வியாழக்கிழமைகளில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ’வலிமை’ திரைப்பட அஜித் புகைப்படத் தொகுப்பு!

Last Updated : Dec 30, 2021, 2:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.