எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார், கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்து கடந்த மாதம் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'வலிமை'.
போனி கபூர் தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஜிப்ரான் இசை அமைத்திருந்தார்கள். இப்படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் குறைவில்லை.
இப்படம் உலகம் முழுவதும் ரூ.200கோடி வரை வசூலித்து உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படம் இன்று (மார்ச் 25) ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழ் , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி பதவியேற்பு!