ஹைதராபாத் : ரசிகர்களின் பேராதர்விற்கு இணங்க வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 11) மாலை 6 மணிக்கு வெளியானது. ஆரம்பமே அமர்களம் என்பது போல், முகத்தை ஹெல்மெட்டுக்குள் மறைத்தபடி அஜித் நிற்பார்.
அப்போது அவரின் ஹெல்மெட் கண்ணாடியில் பைக் ரேஸ் வீரர்கள் அவரை எதிர்த்து நிற்கின்றனர். இந்தக் காட்சியை அஜித் ஹெல்மெட் கண்ணாடி வாயிலாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ஹெச். வினோத்.

ஆக, இது வெறித்தனமான சண்டைக் காட்சி போல் தெரிகிறது. ஏற்கனவே படத்தில் சண்டைக் காட்சிகள் அற்புதமாக வந்திருப்பதாக படக்குழு தெரிவித்திருந்தது.
அடுத்த பிரேமில் பலர் அந்தரத்தில் பறப்பது போல் உள்ளது. ஆக இதுவும் ஒரு வெறியேத்தும் ஒரு சண்டைக் காட்சியாகதான் இருக்க வேண்டும். இதற்கு பின்னணியில் யுவன் சங்கர் ராஜா, மெலடி கலந்த மிரட்டல் இசையுடன் பின்னியெடுக்கிறார்.

அடுத்து ஒரு கூட்டத்தையை தனி ஆளாய் எதிர்க்கிறார் அஜித். அவரின் கையில் சாக்கு மூட்டை ஒன்று வைத்துள்ளார். அதில் பாட்டில்கள் நிரப்பப்பட்டிருக்கலாம்.
சற்று நேரத்தில் மின்னல் போல் வருகிறது பவர் என்ற வாசகம். தொடர்ந்து அந்த வாசகம் இஸ் ஏ ஸ்டேட் மைண்ட் (Power is a state og Mind) என்று நீள்கிறது.
அதிலும் ஏ ஸ்டேட் என்ற இடத்தில் அஜித் முகத்தை முழுமையாக காட்டுகின்றனர். மைண்ட் என்ற வரிகள் வரும்போது அஜித் கண்களால் மிரட்டுகிறார்.
அதன்பின்னர் வலிமை படத்தின் டைட்டில் வருகிறது. பச்சை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆங்காங்கே கீறல்களும் காணப்படுகின்றன. ஆக வலிமையில் அதிரடி காட்சிகளுக்கு பஞ்சமில்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
ValimaiUpdateFansReaction: வலிமை அப்டேட்டை கொண்டாடும் இளசுகள்
நிறைவாக, அஜித் பைக்கில் கண்ணாடிகளை உடைப்பது போல் ஒரு காட்சி வருகிறது. அது வெறித்தனத்தின் உச்சக்கட்டம். அதுமட்டுமின்றி ஒவ்வொரு காட்சியமைப்பிலும் அஜித் ஸ்டைலிஷாக தெரிகிறார். படத்தில் அஜித் ஜோடியாக ஹிமா குரேஷி நடித்துள்ளார்.

மோஷன் போஸ்டரிலே படத்தின் வெளியிட்டு தேதியையும் சூசகமாக கூறிவிட்டனர். ஆம். 2021 சினிமாஸ் என்ற வாசகம் மூலம் படம் திரையரங்கில் வெளியாகிறது தெளிவாகிறது. அந்த வகையில், மொத்தம் 1.23 நிமிடங்கள் ஓடும் இந்த மோஷன் போஸ்டர் தல ரசிகர்- ரசிகைகளுக்கு நிச்சயம் விருந்து.
இதையும் படிங்க : Valimai Update: மாஸாக வெளியான 'வலிமை' பட மோஷன் போஸ்டர்