அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிஜிஎம் கிங் யுவனின் இசையில், அஜித் மாஸாக காட்சியளிக்கிறார். ஒரு பெரும் கூட்டத்தை எதிர்த்து அஜித் நிற்பது போல் ஒரு ஸ்டில், க்ளீன் ஷேவ் செய்து கூலர்ஸ் அணிந்தபடி ஒரு ஸ்டில், கொஞ்சம் நரைத்த தாடியோடு கண்ணில் லென்ஸ் வைத்தபடி ஒரு ஸ்டில் என மோஷன் போஸ்டர் நகர்கிறது. இதுபோக போஸ்டர்கள் தனியாக விடப்பட்டுள்ளன.
போஸ்டரில் பலர் பைக்கில் துரத்துவது போன்ற காட்சி இருக்கிறது. இதில் ஒரு மாஸான பைக் சேசிங் காட்சியை நாம் எதிர்பார்க்கலாம். படத்துக்கு படம் அஜித் பைக் ஸ்டண்ட்கள் செய்தாலும், ஹெச். வினோத் மேக்கிங்கில் இந்த பைக் ஸ்டண்ட் காட்சி மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

கண்ணில் லென்ஸ் வைத்திருக்கிறார் அஜித், கடைசியாக காட்பாதர் படத்தில் கண்ணில் லென்ஸ் வைத்து நடித்திருந்தார். அந்த கெட்டப் பெரும் வரவேற்பை பெற்றது. நீண்ட காலத்துக்கு பிறகு அஜித் இப்படி தோன்றுகிறார். ‘மங்காத்தா’ போல வில்லத்தனமான அஜித்தை இதில் காணலாம்.

கையில் இரும்பு குண்டு ஒன்றை தூக்கியபடி வரும் காட்சியும் மாஸாக இருக்கிறது. நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய திலிப் சுப்பராயண் தான் இதில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். எனவே மாஸ் ஸ்டண்ட் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது.

அதேபோல் மோஷன் போஸ்டர் பிஜிஎம்மில் யுவன் கலக்கியிருக்கிறார். இந்நேரம் பலர் அதை ரிங்டோனாக செட் செய்திருப்பார்கள். மொத்தத்தில் வலிமை ஒரு மாஸ் என்டர்டெய்னராக இருக்கப் போகிறது.
இதையும் படிங்க: Valimai Update: மாஸாக வெளியான 'வலிமை' பட மோஷன் போஸ்டர்