கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கரோனா முதல் அலையின்போது வெளியானபடியே இந்த ஆண்டும் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், தற்போது சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ திரைப்படம், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ள வலிமை திரைப்படம் ஆகியவற்றை தீபாவளிக்கு வெளியிடும் முயற்சிகள் நடைபெற்று வந்தன.
![ரஜினிகாந்த்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-valimai-update-script-7205221_27072021150528_2707f_1627378528_466.jpg)
மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்து வரும் ’சியான் 60’ படத்தையும் தீபாவளிக்கு கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வந்தன.
ஆனால், கடந்த மூன்று மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் அதிகப்படியான நட்டத்தை திரையரங்கு உரிமையாளர்கள் சந்தித்துள்ளனர்.
இந்நிலையில் மூன்று படங்களும் ஒரே நாளில் வெளியானால் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்பதால் ’அண்ணாத்த’ தவிர்த்து மற்ற இரண்டு படங்களை தீபாவளி அன்று வெளியிட வேண்டாம் என தயாரிப்பு தரப்பிடம் திரையரங்கு உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
![வலிமை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-valimai-update-script-7205221_27072021150528_2707f_1627378528_346.jpg)
திரையரங்கு உரிமையாளர்களின் வேண்டுகோளை அடுத்து இந்த இரண்டு படங்களும் தீபாவளி ரேஸில் இருந்து விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கல்ட் கிளாசிக்: 53 yrs of தில்லானா மோகனாம்பாள்