சென்னை: தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்குப் பிரிவு டிஜிபியாக பொறுப்பு வகித்துவந்த ஜே.கே. திரிபாதியின் பதவிக் காலம், இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, தமிழ்நாட்டின் 30ஆவது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
நனவாகும் பேரியக்கத்தின் பெருங்கனவு
இந்நிலையில், தமிழ்நாட்டரசின் தலைமைப் பொறுப்புகளில் தமிழாய்ந்த பெருமக்கள் நியமனம் பெறுவது, பேரியக்கத்தின் பெருங்கனவை நனவுசெய்வதாகும் எனக் கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், ’தமிழ்நாட்டரசின் தலைமைப் பொறுப்புகளில் தமிழாய்ந்த பெருமக்கள் நியமனம் பெறுவது பேரியக்கத்தின் பெருங்கனவை நனவுசெய்வதாகும். பதவி கண்டவர்கள் பாராட்டுக்குரியவர்கள்; பதவி தந்தவர்கள் நன்றிக்குரியவர்கள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செயல் வீரர் சைலேந்திர பாபு ஐபிஎஸ்