விஜய் நடிப்பில், ‘கைதி’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், ‘மாஸ்டர்’. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துமுடிந்த நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக படம் வெளியாகும் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இத்திரைப்படம் தீபாவளி விடுமுறைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ள பாடல்கள், அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
-
SENSATIONAL #VaathiComing hits 8️⃣0️⃣ MILLION views on YouTube.🔥💥💪 #Master @actorvijay @Dir_Lokesh @anirudhofficial pic.twitter.com/Q60pXmVyjC
— XB Entertainment (@XBEntertaiment) October 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">SENSATIONAL #VaathiComing hits 8️⃣0️⃣ MILLION views on YouTube.🔥💥💪 #Master @actorvijay @Dir_Lokesh @anirudhofficial pic.twitter.com/Q60pXmVyjC
— XB Entertainment (@XBEntertaiment) October 7, 2020SENSATIONAL #VaathiComing hits 8️⃣0️⃣ MILLION views on YouTube.🔥💥💪 #Master @actorvijay @Dir_Lokesh @anirudhofficial pic.twitter.com/Q60pXmVyjC
— XB Entertainment (@XBEntertaiment) October 7, 2020
மேலும் இப்பாடல் வெளியாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் தற்போது யூ-டியூப் தளத்தில் 8 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்தச் செய்தியை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதையொட்டி விஜய் ரசிகர்கள் ட்விட்டரில், #VaathiComing என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணம் குறித்து வெளியான பதிவு - விளக்கமளித்த இயக்குநர் சீனு ராமசாமி!