எம்.ஜி.ஆர்., மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரது தாக்கம் அரசியல், சினிமா களத்தில் இருக்கிறது. அதனடிப்படையில் எம்ஜிஆர் உழவனாக நடித்த 'உழைக்கும் கரங்கள்' படத்தைப் போல உழவர் பிரச்சினையை மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது.
’உழைக்கும் கைகள்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் எம்ஜிஆராக, நாமக்கல் எம்ஜிஆர் நடித்துள்ளார். எம்ஜிஆர் வேடமிட்டு பல்வேறு மேடைகளில் தோன்றியுள்ள இவருக்கு, ஜோடியாக கிரண்மயி நடித்துள்ளார்.
மேலும் ஜாக்குவார் தங்கம், பிரேம்நாத் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். விஜயகாந்தை வைத்து 'பூந்தோட்ட காவல்காரன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய செந்தில்நாதன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
’உழைக்கும் கைகள்’ படத்தை டாக்டர் குமரகுருபரன் வழங்க கே.எம். பையர்மூவீஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. சங்கர் கணேஷ் இசையமைத்துள்ளார்.
இன்று (அக். 7) உழைக்கும் கைகள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வெளியிட்டார். மேலும் இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: 48 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியான எம்ஜிஆர் படம் - ரசிகர்கள் கொண்டாட்டம்