நடிகர் விஜய் சேதுபதி தற்போது அரை டஜன் படங்களில் நடித்துவருகிறார். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது முத்திரையைப் பதித்துவிடுவார். அவர் விஜய்யுடன் நடித்த மாஸ்டர் படம் பொங்கலுக்கு வரவுள்ளது.
இந்நிலையில் நானும் ரவுடிதான் படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி - பார்த்திபன் இணைந்து நடிக்கும் திரைப்படம் துக்ளக் தர்பார். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் இப்படத்தை லலித்குமார் தயாரிக்கிறார்.
முழுக்க முழுக்க அரசியல் பின்னணி கொண்ட இப்படத்தில் அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும் இசை அமைப்பாளராக கோவிந்த் வசந்தாவும் பணிபுரிகின்றனர். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.
இதையும் படிங்க:அருண் விஜய்யின் 'சினம்' டீசர் வெளியீடு!