மலையாள திரையுலகில் முக்கிய நடிகராக திகழும் டொவினோ தாமஸ் ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடித்துவருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'ஃபாரன்சிக்' (forensic) திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இதனையடுத்து டொவினோ தாமஸ் இயக்குநர் பேஸில் ஜோசப் இயக்கும் 'மின்னல் முரளி' என்னும் படத்தில் நடித்துவருகிறார். இதில், டொவினோ தாமஸ் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் தயாரிக்கிறது.
உலக சினிமா தரத்தில் இந்த படம் உருவாவதால் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை அதற்கு ஏற்றார்போல் தேர்வு செய்துள்ளனர் படக்குழுவினர்.
குரு சோமாசுந்தரம், அஜு வர்கீஸ், ஃபெமினா ஜார்ஜ், சினேகா பாபு, ஷெல்லி நபுகுமார், பாலசந்திரன், பய்ஜு சந்தோஷ், சுர்ஜித், ஹரிஶ்ரீ அசோகன், மாமுக்கோயா, பிஜுகுட்டன் உள்ளிட்ட பல திறமைமிகு நடிகர்கள் டொவினோ தாமஸுடன் இணைந்து இப்படத்தில் நடித்துவருகின்றனர்.
சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார். ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் இந்த படத்திற்கு சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார்.
இதுவரை இந்திய சினிமா உலகம் கண்டிராத, புத்தம் புதிய சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க “மின்னல் முரளி” படத்தை முழுக்க முழுக்க கேரள கிராமப்புறங்கள் மற்றும் இதுவரை கேமரா காணாத கேரளா லோகேஷன்களில் படமாக்கப்பட உள்ளது.
திருவோணம் தினத்தில் வெளியாகும் டொவினோ தாமஸின் 'மின்னல் முரளி' டீசர் - மின்னல் முரளி டீசர்
டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் ஹீரோ 'மின்னல் முரளி' திரைப்படத்தின் டீசர் திருவோணம் தினத்தன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.