'கோலமாவு கோகிலா' படத்தையடுத்து இயக்குநர் நெல்சன் 'டாக்டர்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகிபாபு, வினய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கேஜேஆர் ஸ்டூடியோஸுடன் இணைந்து, சிவகார்த்திகேயன் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியான நிலையில், வரும் 26ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாகப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'தேர்தல் மற்றும் ரசிகர்களை மனத்தில் வைத்து படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தை ரிலீஸ் செய்யப் பொருத்தமான தேதி முடிவுசெய்யப்பட்டு, அறிவிக்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரன்பீர், சஞ்சாய் லீலா பன்சாலிக்கு கரோனா: காத்திருப்பில் ஆலியா பட்!