தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்கள் வரும் ஜூன் மாதம் 23ஆம் தேதி டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை, அறிவியல் மகளிர் கல்லுரியில் நடைபெறவுள்ளது. விஷால் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து பாக்கியராஜின் சுவாமி சங்கரதாஸ் அணி களமிறங்குவதால் நடிகர்கள் வட்டாரத்தில் இந்த தேர்தல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாண்டவர் அணியினர் தங்களின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளனர்.
சூமார் 22 பக்கங்களில் தயாராகியுள்ள பாண்டவர் அணி தேர்தல் அறிக்கையின் முக்கியமான சில வாக்குறுதிகள்:
- ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும்போதும் இறுதி கட்டத்தில் ஏற்படும் பெருளாதார சிக்கல்களால் அப்படத்தின் காதாநாயகர்கள் தங்கள் சம்பளத்தயை விட்டுக்கொடுக்கும் நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனைத் தடுக்க புது சட்டங்கள் இயற்றப்படும்.
- பழம்பெரும் நடிகர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தப்படும்.
- இயல், இசை, நாடக மன்றத்துடன் சேர்ந்து தகுதிவாய்ந்த கலைஞர்கள் கலைமாமணி விருதுக்கு பரிந்துரை செய்யப்படுவர்.
- ஆய்வாளர் குழு அமைக்கப்பட்டு சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்களின் உண்மையான வடிவம் மீண்டும் அரங்கங்கேற்றப்படும்.
இது குறித்து நடிகர் சங்க பொதுச்செயளாலர் விஷால் கூறுகையில், "நாங்கள் நிறைவேற்றிய கோரிக்கைகளை முதலில் முன்வைப்போம். அதைவிட நடிகர் சங்க கட்டிடத்தை முன்வைத்து நாங்கள் பிரசாரம் செய்வோம். இன்னும் நான்கு மாதத்தில் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்படும். நாடக நடிகர்களுக்கு வழங்கப்படும் பென்ஷன் தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்படும்" என்றார்.
விஷால் அணி மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பற்றிக் கேட்டபோது, "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த கட்டிட பணியில் சிறப்பாக செயல்படவில்லை என்பது மட்டுமே அவர்கள் சார்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டு. இதுவரை அந்த ஒன்றை மட்டுமே குற்றச்சாட்டாக கூறி வருகிறார்கள். ஆனால் கட்டடப்பணி சிறப்பாகவே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது" என தெரிவித்தார்.