ஏ1, ஜாக்பாட் உள்ளிட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் மொட்டை ராஜேந்திரனின் புதிய பட போஸ்டர் வெளியாகியுள்ளது. ’டைம் இல்ல’ என்று தலைப்பிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் மனு பார்த்திபன் இயக்கும் இப்படம் திரில்லர் கலந்த காமெடி கதையாம், படம் குறித்த முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.