ETV Bharat / sitara

வாக்கைக் காப்பாற்றிய டி.இமான் - வைரலான பாடகருக்கு 'சீறு'படத்தில் வாய்ப்பு! - சீறு படத்தின் பாடல்

இசையமைப்பாளர் டி.இமான் தனது இசையில் மாற்றுத்திறனாளி திருமூர்த்தியைப் பாடல் ஒன்றைப் பாட வைத்துள்ளார்.

imman
author img

By

Published : Oct 23, 2019, 12:49 PM IST

சமீபத்தில் பார்வையற்ற இளைஞர் ஒருவர் விஸ்வாசம் படத்தில் வரும் 'கண்ணான கண்ணே' பாடலைப் பாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இந்த வீடியோவைப் பார்த்த இசையமைப்பாளர் டி.இமான், அவரின் முகவரியைக் கண்டுபிடித்து தரும்படி இணைய வாசிகளிடம் கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையை ஏற்ற இணையவாசிகள், அந்த இளைஞரின் முகவரியை கண்டுபிடித்து இமானுக்கு அனுப்பினர்.

அப்போது இமான், 'மாற்றுத்திறனாளியான திருமூர்த்தியின் முகவரியை பகிர்ந்தவர்களுக்கு நன்றி. சம்பந்தப்பட்ட நபரிடம் பேசினேன். என்னுடைய திரைப்படத்தில் அவர் ஒரு பாடல் பாடுவதற்கு வாய்ப்பளிக்கவுள்ளேன். இறைவன் அவருக்கு அருள் புரியட்டும்' எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து தற்போது இயக்குநர் ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் 'சீறு' படத்தில் ஒரு பாடல் பாட பெருவாய்ப்பு ஒன்றை அளித்துள்ளார். 'பார்வதி' எழுதிய மெலடிப் பாடலை திருமூர்த்தி அருமையாக பாடியுள்ளதாக டி. இமான் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க: 'சிறு' பாடகராக அறிமுகமாகும் பிரபல பாடகரின் மகன்!

Intro:Body:

D. Imman gives chance to Thirumoorthi by the film of Seer

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.