ஃபாக்ஸ் க்ரோ ஸ்டுடியோஸ், ஜி. வி. கே. எம் எலிபண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'த மாயன்'. இந்தப் படத்தை பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விஷாலை வைத்து இயக்கிய ராஜேஷ் கண்ணா தயாரித்து இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் வெளியிட்டனர்.

படம் குறித்து இயக்குநர் ராஜேஷ் கண்ணா, இது இந்தியாவிலிருந்து எடுக்கப்பட்ட முதல் கமர்ஷியல் ஆங்கிலப் படம் எனக் கூறினார். மேலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் நேரடியாக இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த இயக்குநர், படத்தில் வினோத் மோகன் கதாநாயகனாகவும் பிரியங்கா மோகன் கதாநாயகியாகவும் நடித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

படத்தில் ஒரு பாடலை நடிகர் சிம்பு, அருண்ராஜா காமராஜ் ஆகியோர் பாடியுள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும் ஒரு பாடலை பாடவுள்ளனர்.
இதையும் படிங்க: 'இரையாகு இல்ல வேட்டையாடு' - புதுப்பாய்ச்சலில் 'அமலா பால்'