பிகில் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய், கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார். மாஸ்டர் என்று பெயரிட்டுள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், சஞ்சீவ், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். இதற்கிடையில் தளபதி 65 படத்தை யார் இயக்குவது என்று கோலிவுட்டில் பெரும் போட்டி நிலவிவருகிறது.
அந்தவகையில் இந்த லிஸ்ட்டில் பாண்டிராஜ், ஏ.ஆர். முருகதாஸ், மகிழ்திருமேனி, பேரரசு, கார்த்திக் தங்கவேலு ஆகியோரின் பெயர்கள் அடிபட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது புதிதாக இதில் பெண் இயக்குநர் சுதா கொங்கரா இணைந்துள்ளார்.
இவர் விஜய்யை நேரில் சந்தித்து படத்தின் ஒன்லைன் சொல்லிவிட்டதாகவும், அது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதால் படத்திற்கான அடுத்தக்கட்ட பணிகளுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்தத் தகவலை, சுதா கொங்கரா இன்னும் உறுதிசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுதா கொங்கரா தமிழில் இறுதிச்சுற்று என்ற வெற்றி படத்தை இயக்கினார். இதையடுத்து சூர்யாவை வைத்து 'சூரரைப் போற்று' படத்தை இயக்கி முடித்துள்ளார். கோடை விடுமுறைக்குப் படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மேன் vs வைல்டு: புலிகள் காப்பகத்தின் விதிகளை மீறி ஆவணப்படம்...!