மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தில் இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் டீசரில் ரெட்ரோ ஸ்டைலில் கங்கனா ரணாவத் நடனம் ஆடும் காட்சியோடு, தொண்டர்கள் மத்தியில் நிற்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருப்பது கவனத்தில் ஈர்த்துள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த டீசரில் ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை முதல் அரசியல் வாழ்க்கை வரை எனவும், தெரிந்த நபரின் தெரியாத பக்கங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 26ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கிளாப் தட்ட தொடங்கியது தலைவியின் ஆட்டம்!