அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘வலிமை’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் 'வலிமை' இந்நதாண்டு இறுதியில் திரையிட படக்குழு முடிவுசெய்துள்ளது. நீண்ட நாள்களாகப் படப்பிடிப்பில் இருக்கும் வலிமை, தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.
அஜித்தின் சண்டைக் காட்சிகள் வெளிநாட்டில் எடுக்க படக்குழு ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா பரவல் காரணமாக இது தள்ளிப்போனது. தற்போது ஹெச். வினோத் இந்தக் காட்சிகளை விரைந்து முடிக்க தீவிரமாக உள்ளார்.
அதன்படி ஐந்து நாள்கள் இந்தக் காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரியவருகிறது. முதலில் இந்தச் சண்டைக் காட்சிகள் ஸ்பெயினில் படமாக்கப்பட இருந்தநிலையில், தற்போது ரஷ்யாவில் படமாக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் படப்பிடிப்பு முடிவடைந்து டீசர், ட்ரெய்லர் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.