ETV Bharat / sitara

யூரோ கால்பந்து தொடரையும் விட்டு வைக்காத 'வலிமை' அப்டேட்! - யூரோ கால்பந்து தொடர்

யூரோ கால்பந்து தொடர் நடக்கும் மைதானத்தில் ரசிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் அப்டேட் கேட்ட புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

valimai
valimai
author img

By

Published : Jul 8, 2021, 12:36 PM IST

போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் 'வலிமை'. இந்தப் படத்தில் அஜித்துடன் நஸ்ரியா, ஹூமா குரேஷி, யோகி பாபு, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

'வலிமை' படத்தின் படப்பிடிப்பு, பூஜையைத் தவிர வேறு எந்த அப்டேட்டும் நீண்ட நாள்களாகியும் வராத காரணத்தால், அஜித் ரசிகர்கள் செல்லும் இடமெல்லாம் யாரைப் பார்த்தாலும் 'வலிமை' அப்டேட் கேட்டு வந்தனர்.

வெளிநாட்டு கிரிக்கெட் வீரரில் தொடங்கி உள்ளூர் பூசாரி, கடவுள் முருகன் வரை அனைவரிடமும் அஜித் ரசிகர்கள் 'வலிமை' அப்டேட் குறித்து கேட்டுவருகிறார்கள். ஆனால், தயாரிப்பு தரப்போ எதற்கும் அசரவில்லை.

அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி, 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என, படத் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்த நிலையில், சில காரணங்களால் அதுவும் தள்ளிபோனது. இதனால் அஜித் ரசிகர்கள் விரக்தியடைந்தனர்.

valimai
யூரோ கால்பந்து மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்கும் ரசிகர்

இதனையடுத்து கடந்த சில தினங்களாக அஜித் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் மீண்டும் வலிமை அப்டேட் கேட்க தொடங்கினர். இதன் ஒருபகுதியாக இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியின் போது கிரிக்கெட் வீரர் அஸ்வினிடம், அஜித் ரசிகர்கள் 'வலிமை' பட அப்டேட் கேட்டனர்.

தற்போது யூரோ கால்பந்து தொடர் நடக்கும் மைதானத்தில் 'வலிமை' அப்டேட் கேட்ட ரசிகரின் புகைப்படம் சமூவலைதளத்தில் வைரலாகி வருகிறது. வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூலை 15ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: வெளியாவதற்கு முன்பே சாதனை படைத்த 'வலிமை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.