பைக் மீது அதிகம் பிரியம் கொண்ட தல அஜித் சமீபத்தில் பைக்கில் வட மாநிலங்களுக்குச் சென்றுள்ளார். மாஸாக அவர் பைக்கில் வலம் வரும் புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகி அஜித் ரசிகர்களைக் குஷியில் ஆழ்த்தி வருகிறது.
சமீபத்தில் அஜித் தாஜ்மஹால் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம், இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியான வாகா எல்லையில், எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் மிகப்பெரிய மலை உச்சியில் ஒய்யாரமாக நின்று போஸ் கொடுப்பதுபோன்று உள்ளது.
-
At the edges of the world, making lifetime memories. Thala #Ajith sir. ❤
— Ajith (@ajithFC) October 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
| #Valimai | #Ajithkumar | #WorldTour | #BikeTrip | pic.twitter.com/y3oRhsjju4
">At the edges of the world, making lifetime memories. Thala #Ajith sir. ❤
— Ajith (@ajithFC) October 27, 2021
| #Valimai | #Ajithkumar | #WorldTour | #BikeTrip | pic.twitter.com/y3oRhsjju4At the edges of the world, making lifetime memories. Thala #Ajith sir. ❤
— Ajith (@ajithFC) October 27, 2021
| #Valimai | #Ajithkumar | #WorldTour | #BikeTrip | pic.twitter.com/y3oRhsjju4
இருப்பினும் இந்தப் புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. மிகவும் மாஸாக வெளியாகியிருக்கும் அஜித்தின் இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:வாகா எல்லையில் 'வலிமை' அஜித் - எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உற்சாகம்