தல அஜித்திற்கு ஒரு இயக்குநரைப் பிடித்துவிட்டால் அவர்களுடன் தொடர்ந்து திரைப்படத்தில் நடிப்பார் என அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதன்படி சிவா, சரண் வரிசையில் தற்போது இயக்குநர் வினோத்தோடு இணைந்துள்ளார்.
தல அஜித் தற்போது, வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் படத்தில் நடித்துவருகிறார். இதனையடுத்து அவர் தனது 61ஆவது படத்தையும் இயக்குநர் வினோத் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையொட்டி அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் #THALA61 என்று ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.
முன்னதாக வினோத் - அஜித் கூட்டணியில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.