ETV Bharat / sitara

குப்பத்து பையனாக மாஸ் காட்டும் ஜி.வி. பிரகாஷ் - வெளியான 'ஜெயில்' டீசர்!

author img

By

Published : Oct 27, 2021, 5:45 PM IST

Updated : Oct 27, 2021, 6:11 PM IST

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயில்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Jail
Jail

தமிழில் இயக்குநர் வசந்தபாலனின் 'வெயில்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இதைத்தொடர்ந்து பல படங்களில் இசையமைத்த அவர் ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்ததுடன், நினைவில் நிற்கும் பின்னணி இசையையும் தந்துள்ளார்.

இந்நிலையில், 'டார்லிங்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். இளைஞர்களுக்கு பிடித்தமான கதாபாத்திரங்களையும் கதைகளையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தன்னை சினிமாவில் அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகிவரும் 'ஜெயில்' படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்து, இசையமைத்துள்ளார்.

‘ஜெயில்’ படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியாக தயாராகவுள்ளன. இப்படத்தை கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ளார்.

ஜெயில் படத்தில் இடம்பெற்றுள்ள, 'காத்தோடு காத்தானேன்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. ஜெயில் படத்தின் டீசரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

டீசரில், குடிசை மாற்றுவாரியம் பகுதியைச் சேர்ந்த இளைஞராக ஜிவி பிரகாஷ் வருகிறார். இதில் நண்பர்களுக்கு பிரச்னை வந்தால் அதை தட்டிகேட்கிறார். மேலும் சேரி பகுதி மக்களை அப்புறப்படுத்தும் போது அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளும் காண்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது டீசர் சமூகவலைதளத்தில் நல்ல வரேவற்பை பெற்று வருகிறது. விரைவில் 'ஜெயில்' வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என டீசரில் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஜெயில் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

Last Updated : Oct 27, 2021, 6:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.