உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த எஸ்.பி.பி. கடந்த வாரம் உயிரிழந்தார். அவரின் உடல் தாமரைப்பாக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு பாரத ரத்னா, தாதாசாகேப் பால்கே ஆகிய விருதுகள் வழங்க வேண்டும் என்று திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் எஸ்.பி.பி. பெயரில் இசை பல்கலைக்கழகம் கட்ட வேண்டும் என்று ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தற்போதைய ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “எஸ்.பி.பி. நினைவாக அவர் பிறந்த நெல்லூரில், அவர் பெயரில் ஒரு இசைப் பல்கலைக்கழகம் கட்ட வேண்டும். அத்துடன் பல்கலைக்கழகத்தில் அவரின் வெண்கலச் சிலையை நிறுவ வேண்டும்.
இதன்மூலம் பல இசைக் கலைஞர்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. அதேபோல் அவர் பெயரில் தேசிய விருது வழங்க வேண்டும்” என்று கோரிக்கைவைத்துள்ளார்.
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
இதையும் படிங்க: பாடகர் எஸ்பிபி-க்கு பாரத ரத்னா - கங்கை அமரன் நம்பிக்கை!