ETV Bharat / sitara

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிக்கு அனுமதி கொடுத்த தமிழ்நாடு அரசு - சின்னத்திரை

சென்னை: சினிமா, சின்னத்திரை சார்ந்த போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வரும் 11ஆம் தேதி முதல் தொடங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

போஸ்ட் புரொடக்‌ஷன்
போஸ்ட் புரொடக்‌ஷன்
author img

By

Published : May 8, 2020, 7:31 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, தமிழ்நாட்டில் சின்னத்திரை, வெள்ளித்திரை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தினக்கூலி தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவித்துவருகின்றனர். மேலும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிக்காவது அரசு அனுமதி தர வேண்டும் என்று இந்தியத் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அக்கோரிக்கையை ஏற்று, வரும் 11ஆம் தேதி முதல் சினிமா, சின்னத்திரையின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை துவங்கலாம் என்று அனுமதி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும், கரோனா பாதிப்பின் காரணமாக, கடந்த 50 நாட்களாக எந்தப் பணியும் நடக்காததால், பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தத் தருணத்தில் தயாரிப்புக்குப் பிந்தைய (போஸ்ட் புரொடக்‌ஷன்) பணிகளை செய்வதற்காக மட்டும் அனுமதியளிக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர்களின் கோரிக்கையை பரிசீலித்த முதலமைச்சர் பழனிசாமி அனுமதியளித்துள்ளார்.

கீழ்க்கண்ட தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளை மட்டும் வரும் 11ஆம் தேதி (திங்கள்) முதல் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

  • படத்தொகுப்பு
  • குரல் பதிவு
  • கம்யூட்டர் மற்றும் விஷுவல் கிராபிக்ஸ்
  • டி.ஐ.எனப்படும் நிற கிரேடிங்
  • பின்னணி இசை
  • ஒலிக்கலவை

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள், இப்பணியில் ஈடுபடுகின்ற பணியாளர்களுக்கு உரிய அனுமதி சீட்டுகளை பெற்றுத் தந்து தனிமனித இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினி உபயோகித்தும் மத்திய, மாநில அரசுகள் விதித்த அனைத்து கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, பணி செய்வதை உறுதி செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: 'திரைத்துறை நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்’- ஆர்.கே. செல்வமணி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.