பருவமழை பொய்த்து போனதால் தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. 2018ஆம் ஆண்டைவிட இந்த வருடம் முக்கியமாக சென்னையில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இன்னும் இருபது நாட்களில் சென்னையில் தண்ணீர் பஞ்சம் நிலவும் என்று அரசு அலுவலர்கள், இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு பிழைப்பு தேடி வரும் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் சென்னையை விட்டு வெளியேறும் நிலைக்கு வந்துவிட்டனர். இந்த தண்ணீர் பஞ்சம் தமிழ்நாட்டை மட்டும் அல்ல இந்தியாவையே பாதிக்க வைத்துள்ளது.
இந்நிலையில், காமெடி நடிகர் சதீஷ் தண்ணீர் சேமிப்பு குறித்து காணொளி ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த காணொளி வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் காமெடி நடிகர் சதீஷ். விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரின் படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவர் நடித்தது குறைந்த படங்கள் என்றாலும், முன்னணி நடிகர்கள் தண்ணீர் பிரச்னை பற்றி வாய் திறக்காத சூழலில் இவர் முன்வந்து பேசியிருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
-
தமிழனாய் இருந்தால் மட்டும் அல்ல..... தண்ணீரை சேமிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் பகிருங்கள் 🙏🏻🙏🏻🙏🏻 #SaveWater 🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/7D3z4qlHmj
— Sathish (@actorsathish) May 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தமிழனாய் இருந்தால் மட்டும் அல்ல..... தண்ணீரை சேமிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் பகிருங்கள் 🙏🏻🙏🏻🙏🏻 #SaveWater 🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/7D3z4qlHmj
— Sathish (@actorsathish) May 29, 2019தமிழனாய் இருந்தால் மட்டும் அல்ல..... தண்ணீரை சேமிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் பகிருங்கள் 🙏🏻🙏🏻🙏🏻 #SaveWater 🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/7D3z4qlHmj
— Sathish (@actorsathish) May 29, 2019
மேலும், தனக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்லாமல், தண்ணீரின் அவசியத்தை புரிந்துகொண்டு, தமிழனாய் மட்டும் அல்ல தண்ணீரை சேமிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் பகிருங்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.