ETV Bharat / sitara

பள்ளி மாணவிகளை குறிவைத்து ஆபாச உரையாடல்: நடிகர் டேனியல் போப் வழக்கறிஞர் பதில்! - நடிகர் டேனியல் போப் செய்திகள்

சென்னை: பள்ளி மாணவிகளை குறிவைத்து ஆபாச உரையாடலில் ஈடுபடுவதாக நடிகர் டேனியல் போப் மீது சமூக வலைதளங்களில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு டேனியல் தரப்பு வழக்கறிஞர் பதிலளித்துள்ளார்.

daniel
daniel
author img

By

Published : Apr 19, 2021, 9:16 PM IST

நடிகர் விஜய்சேதுபதியின் 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில்'பிரண்டு லவ் மேட்டரு பீல் ஆகிட்டப்லா, ஆஃப் சாப்பிட்ட கூல் ஆகிடுவாரு' என்ற வசனத்தின் மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் டேனியல் ஆனி போப். இதன்பின் டேனியல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் மேலும் பிரபலமானார்.

இதையடுத்து டேனியல் தனது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பள்ளி பெண்களை குறிவைத்து ஆபாசமாக உரையாடும் புகைப்படங்கள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேசன் சாமுவேல் என்ற நபர் தனது சமூக வலைதள பக்கத்தில், நடிகர் டேனியல் இளம்பெண்களிடம் தாமாக முன்வந்து ஆபாசமாக பேசி வருவதாக கூறி அந்த உரையாடலை பகிர்ந்துள்ளார்.

Daniel Annie Pope
சமூகவலைதள உரையாடல்

மேலும், தன்னை ஒரு நடிகராக இளம்பெண்களிடம் அறிமுகமாக்கிக் கொள்ளும் டேனியல், அவர்களை தனது வலையில் விழ வைத்து ஆபாசமாக பேசி வருகிறார். அவர்கள் அச்சத்தால் இதுபற்றி புகார் கொடுக்க முன்வர தயங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Daniel Annie Pope
சமூகவலைதள உரையாடல்

இதுமட்டுமின்றி நடிகர் டேனியில் இன்ஸ்டாகிராமில் பேசி, இளம்பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக அவரது அறையில் சந்தித்து, பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பாதிக்கப்பட்ட பெண் பேசிய ஆடியோவையும் ஜேசன் சாமுவேல் வெளியிட்டார்.

Daniel Annie Pope
சமூகவலைதள உரையாடல்

அவர் இதேபோல் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பல பள்ளி இளம்பெண்களை குறிவைத்து ஆபாசமாக பேசி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. இதைத்தொடர்ந்து டேனியல் தரப்பு வழக்கறிஞர் ரகுமான் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

Daniel Annie Pope
சமூகவலைதள உரையாடல்

அதில், "கடந்த 4 நாள்களாக டேனியல் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரக்கூடிய வீடியோ, புகைப்படங்கள், அனைத்தும் போலியானவை. அவரது பெயரை கெடுக்கவே இதுபோன்ற செயலில் சில விஷமிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Daniel Annie Pope
சமூகவலைதள உரையாடல்

டேனியல் பற்றி அவதூறாக பதிவிடப்படும் வீடியோக்கள், புகைப்படங்கள், மீம்ஸ் போன்றவைகளை சமூக வலைதளங்களில் இருந்து சம்மந்தப்பட்ட நபர்களே உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால் சைபர் கிரைம் பிரிவில் அவர்கள் மீது புகார் அளிக்கப்படும். மேலும், அந்த நபர்கள் மீது அவதூறு வழக்கு ஒன்றும் தொடர உள்ளதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை, அளித்தால் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கபடும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.