தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தமன்னா. இவர் சமீபத்தில் தெலங்கானாவில் வெப்-சீரிஸ் படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட கரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தமன்னா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்செய்தியை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த வாரம் தமன்னாவின் பெற்றோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்ட நிலையில், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், விஷால், நடிகைகள் நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா அர்ஜூன், இயக்குநர் ராஜமவுலி உள்ளிட்ட பலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு, குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.