சென்னை: சூர்யா நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் செயல்பட்டு வருகிறார். இவரது தயாரிப்பில் அடுத்தடுத்து நான்கு படங்கள் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளன.
பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என சூர்யா பிஸியாக இருக்கிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள கிடார் கம்பி மேலே நின்று ஆந்தாலஜி படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவரது இயக்கத்தில் ’தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யா நடித்திருந்தார். தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இதையும் படிங்க: பகத் பாசில் பிறந்தநாள் - வாழ்த்திய விக்ரம் படக்குழு!