இந்தப் படத்தைப் பார்த்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (MK Stalin), கமல் ஹாசன், இயக்குநர் பா. இரஞ்சித், தெலுங்கு நடிகர் நானி உள்ளிட்ட பலர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடிகர் சூர்யாவிடம் உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாளுக்கு உதவும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்ற சூர்யா, அவருக்கு 10 லட்சம் ரூபாய் வங்கி வைப்புநிதியாக வழங்கப்படும் எனத் அறிவித்தார்.
இதனையடுத்து சூர்யா அலுவலகத்திலிருந்து பார்வதி அம்மாளைத் தொடர்புக் கொள்ள முயன்றனர். சென்னையில் வசித்து வரும் அவர், ஒரு விசேஷத்திற்காக விருத்தாசலத்தையடுத்து உள்ள தன் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். இதனால் அங்குள்ள சூர்யா ரசிகர் மன்றத்தைத் தொடர்பு கொண்டு, அவரை ரசிகர் மன்றத்தினர் இன்று (அக்.16) சென்னை அழைத்து வருகின்றனர்.
மேலும் இன்றிரவு சூர்யா அவரை, குடும்பத்துடன் டின்னருக்கு சந்திக்கவுள்ளார் என்றும், அவருக்கு நிதியுதவிகளை வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. நீதிபதி சந்துருவின் பார்வையில் கிடைத்த தகவல்களுடன் ஜெய்பீம் படக்குழுவினர் படத்தை உருவாக்கினர். மறைந்த ராசாக்கண்ணு மனைவி பார்வதியைப் படக்குழுவினர் இதுவரை சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எங்கள் உணர்வுகளை சூர்யா புரிந்துகொள்ளவில்லை - பாமக வழக்கறிஞர் கே.பாலு