மேயாத மான், மெர்குரி போன்ற வெற்றி திரைப்படங்களை தயாரித்த ஸ்டோன் பெஞ்ச் திரைப்பட குழுவினரின் மூன்றாவது படம் பற்றிய அறிவிப்பை கார்த்திக் சுப்புராஜ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. 2019ஆம் ஆண்டின் தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வான கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
கார்த்திக்கேயன் சந்தானம் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் கொடைக்கானலில் தொடங்க உள்ளது. மேலும், சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.