ETV Bharat / sitara

ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் பட வெளியீடுத் தேதி மாற்றம்? - ஆர்ஆர்ஆர் பட அப்டேட்

ஆர்ஆர்ஆர் திரைப்படம் அக்டோபர் 13ஆம் தேதிக்கு பதிலாக ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்ஆர்ஆர்
ஆர்ஆர்ஆர்
author img

By

Published : Apr 28, 2021, 1:57 PM IST

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்' (ரத்தம் ரணம் ரௌத்திரம்). தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்லுரி சீதாராம ராஜு, குமரம் பீம் ஆகிய இருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் உருவாகி வருகிறது. ரசிகர்கள் இந்தப் படத்தின் டீசரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், படக்குழுவினர், கிளைமேக்ஸ் படப்பிடிப்புத் தொடங்கியதை அறிவிக்கும்விதமாக புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தனர். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்தப் படத்தின் தமிழ்நாடு உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது.

இதற்கிடையில் கரோனா இரண்டாவது அலை காரணமாக ஆர்ஆர்ஆர் படம் வரும் அக்டோபர் 13ஆம் தேதிக்குப் பதிலாக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுகுறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படக்குழுவினரிடமிருந்து வரவில்லை.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.