ETV Bharat / sitara

ஸ்ருதிஹாசனின் வித்தியாசமான பெர்த்டே கொண்டாட்டம் ! - sruti-haasan-birthday-celebration

இன்று தனது 36ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகை ஸ்ருதிஹாசன், சமூகம் மற்றும் சுற்றுப்புறம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஸ்ருதிஹாசனின் வித்தியாசமான பெர்த்டே செலிபிரேசன்!

author img

By

Published : Jan 28, 2022, 7:31 AM IST

சூர்யா நடிப்பில் வெளியான 'ஏழாம் அறிவு' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். இவர் நடிகர் கமலின் மூத்த மகள் . இவர் பாடிய ஏலேலம்மா, கண்ணழகா உள்ளிட்ட பல்வேறு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் திரைத்துறையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் ஸ்ருதிஹாசன் இன்று (ஜன.28) தனது 36ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையடுத்து திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் காதலருடன் மும்பையில் வசித்துவரும் ஸ்ருதிஹாசனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு தனது பிறந்தநாளையொட்டி சமூகம், சுற்றுப்புறம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஸ்ருதிஹாசன் கொண்டாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மனநலம், திரைப்படம் மற்றும் ஊடகங்களில் பெண்கள், பேஷன் துறையின் நிலைத்தன்மை போன்ற பல தலைப்புகளில் தனது சமூக வலைதளபக்கத்தில் நேரலை நிகழ்வுகளை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: போக்குவரத்து விதிகளை மீறும் வகையில் விளம்பரம்: நடிகர் கார்த்தி மீது புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.