இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிவரும் படம் 'தமிழரசன்'. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மேலும் சுரேஷ்கோபி, ராதாரவி, யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
எஸ்.என்.எஸ். மூவிஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் இளையராஜா இசையில் இப்படத்தில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
![இளையராஜா, எஸ்.பி.பி, spb, ilaiyaraja](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3454602_iugui.jpg)
பாடல்களுக்கு ராயல்டி கேட்ட விவகாரத்தில் பிரிந்த இளையராஜா - எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இணை 'நட்பு', 'தமிழரசன்' படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. இதனை இருவரது ரசிகர்களும் கொண்டாடிவருகின்றனர்.