சென்னை: பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை எம்ஜிஎம் ஹெல்த்ஹேர் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் தொற்று காரணமாக எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
உள்நாடு மற்றும் வெளிநாட்டு மருத்துவ நிபணர்களுடன் எங்களது மருத்துவ குழுவினர் தொடர்ந்து தொடர்பில் இருந்தவாறு உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவரது உடல்நிலை மாற்றங்கள் அனைத்தும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, எஸ்.பி. பாலசுப்ரமணியம் மகனும், பாடகருமான எஸ்.பி. சரண், தனது தந்தை உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவரது உடல்நிலையை மீட்டெடுக்கும் வகையில் கூட்டுப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என இன்று (ஆகஸ்ட் 20) மாலை தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவமனை அதை உறுதிபடுத்தியுள்ளது.
திரையுலகினர் சார்பில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குணமடைந்து திரும்ப வேண்டும் என்று கூட்டுப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. இசைப்பிரயர்கள் பலரும் தங்களது இருப்பிடத்தில் இருந்தவாறே பாடகர் பாலசுப்ரமணியத்துக்காக கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: எஸ்.பி.பி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை - எஸ்.பி.சரண்