ETV Bharat / sitara

நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: விஷால் அணி முன்னிலை; எதிரணி வெளிநடப்பு - நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாண்டவர் அணியை சேர்ந்த நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் தற்போதைய நிலவரப்படி முன்னிலை வகிக்கின்றனர். மேலும், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடப்பதாகக் கூறி, சங்கரதாஸ் அணியினர் அதிருப்தியில் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறினர்.

South Indian Film Artists Association ELECTION

author img

By

Published : Mar 20, 2022, 11:12 AM IST

Updated : Mar 20, 2022, 12:17 PM IST

சென்னை: மூன்றாண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் நடிகர் சங்கத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை (மார்ச் 20) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள குட்-ஷெப்பேர்ட் பள்ளியில் தொடங்கியது.

முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. தலைவர், 2 துணைத் தலைவர்கள், பொருளாளர் மற்றும் பொதுச் செயலாளர் என ஐந்து முக்கிய பதவிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

பாண்டவர் அணி முன்னிலை

இந்நிலையில், துணை தலைவர் பதவிக்கு விஷால் அணி சார்பில் போட்டியிட்ட பூச்சி முருகன் முன்னிலை வகித்து வந்த நிலையில், மொத்த வாக்குச்சீட்டுகளை விட 5 சீட்டுகள் அதிகமாக இருப்பதாக, எதிரணியை சேர்ந்த ஜசரி கே. கணேஷ் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து தற்போது, வாக்கு எண்ணும் பணி நிறுத்திவைக்கப்பட்டது. சிறிது நேரத்திற்கு பின்னர், வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது.

பாண்டவர் அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர், துணை தலைவர் பதவிகளுக்கு போட்டியிடும் பூச்சி முருகன், கருணாஸ், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் தற்போதைய நிலவரப்படி முன்னிலையில் உள்ளனர்.

மொத்த வாக்குகள்
மொத்த வாக்குகள்

சங்கரதாஸ் அணி வெளிநடப்பு

வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஐசரி கணேஷ், "மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த தீர்ப்பு வந்துள்ளது. நடிகர் சங்க தேர்தல் கட்டடம் கட்ட தாமதானது காரணம், மேல் முறையீடு செய்ததால்தான். பாண்டவர் அணி நீதிமன்ற தீர்ப்பை மேல் முறையீடு செய்தது காரணமாகதான் இந்த தாமதம்.

தற்போது 10 பெட்டிகள் திறக்கப்பட்டது. ஒரு பெட்டி மட்டும் திறக்க தாமதமானது. அதாவது தபால் வாக்குகளுடன் மொத்தம் பதிவான வாக்குகள் 1,916. நேரடியாக பதிவான வாக்குகள் 1,602. ஆனால், ஆனால் தலைவர் பதவிக்கு 1609 வாக்குகளும், பொது செயலாளர் பதவிக்கு 1605 வாக்குகளும், துணை தலைவர் பதவிக்கு 1608 வாக்குகளும், பொருளாளர் பதவிக்கு 1609 வாக்குகளும் பதிவாகியுள்ளன. பதிவான வாக்குகளை விட இந்த எண்ணிக்கை எப்படி அதிகமானது என தெரியவில்லை.

அதே போல மொத்த தபால் வாக்குகள் 1,042 உள்ள நிலையில், 1,180 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. கூடுதலாக, பதிவான 138 எப்படி வந்தது எனத் தெரியவில்லை. இதுகுறித்து தேர்தல் அலுவலரிடம் கேட்டால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. அதனால் அதிருப்தியில் எங்கள் அணி வாக்கு எண்ணிக்கையில் இருந்து வெளியேறுகிறது" எனத் தெரிவித்தார்.

வாக்கு பெட்டிகள்
வாக்கு பெட்டிகள்

மொத்தம் 29 பதவிகள்

நடிகர் விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டனர். பாண்டவர் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிட்டனர். துணைத் தலைவர்கள் பதவிக்கு இந்த அணியின் சார்பில் பூச்சி முருகன், நடிகர் கருணாஸ் ஆகியோர் போட்டியிட்டனர்.

சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு கே. பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு நடிகர் பிரசாந்த் ஆகியோர் போட்டியிட்டனர். துணைத் தலைவர் பதவிகளுக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிட்டனர்.

நேரடியாக பதிவான வாக்குகள் 1602 எனவும் தபால் வாக்குகள் 1180 எனவும் மொத்தம் 2780 வாக்குகள் செயற்குழு உறுப்பினர்களுக்கு பதவியாகியுள்ளது.

இதில், 24 செயற்குழு உறுப்பினர்கள், ஒரு தலைவர், 2 துணைத் தலைவர்கள், ஒரு பொருளாளர் மற்றும் ஒரு பொதுச் செயலாளர் ஆகிய பதவிகள் என மொத்தம் 29 பதவிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

நீதிமன்ற உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது. இந்த நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்த நிலையில், செயற்குழு ஒப்புதலுடன் பதவிக்காலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி, தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

வாக்கு எண்ணும் மையம் வரும் நடிகர் பிரசாந்த்

இதன்பின்னர், கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், உறுப்பினர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என 61 உறுப்பினர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, மூன்றாண்டுகள் கழித்து நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையை மூன்று வாரத்திற்குள் முடிக்கவும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய் குரலில் ஜாலியோ ஜிம்கானா- வேற லெவல் என்ஜாய்மெண்ட்!

Last Updated : Mar 20, 2022, 12:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.