ETV Bharat / sitara

அதிரடி ஆக்ஷ்ன் காட்சிகள்- சூர்யவன்ஷி பட ட்ரெய்லர் வெளியீடு!

author img

By

Published : Mar 2, 2020, 4:50 PM IST

'சூர்யவன்ஷி' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சூர்யவன்ஷி பட ட்ரெய்லர் வெளியீடு
சூர்யவன்ஷி பட ட்ரெய்லர் வெளியீடு

பாலிவுட்டில் நடிகர்கள் அஜய் தேவ்கன், அக்க்ஷய் குமார், ரன்வீர் சிங் ஆகியோர் நடித்துள்ள படம் ’சூர்யவன்ஷி’. ரோகித் ஷெட்டி இயக்கியுள்ள இப்படத்தை தர்மா புரொடக்ஷ்ன் நிறுவனம் தயாரித்துள்ளது. கத்ரீனா கைஃப் நடித்துள்ள இப்படத்தில் வில்லனாக ஜாக்கி ஷெராப் நடித்துள்ளார்.

த்ரில்லர் காப் ஸ்டோரியாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 'சூர்யவன்ஷி'படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. மும்பையில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளை நம் கண்முன் கொண்டு வரும் நோக்கத்தில் படத்தின் ட்ரெய்லர் துவங்குகிறது.

அதிரடி ஆக்ஷ்ன் காட்சிகள், கார் ரேஸ் என்று ட்ரெய்லர் முழுவதும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. கத்ரீனா கைஃப் இப்படத்தில் அக்ஷ்ய் குமார் காதலியாக நடிக்கிறார் என்பது ட்ரெய்லர் மூலம் தெரிகிறது. அக்ஷ்ய் குமார், ரன்வீர் சிங், அஜய் தேவ்கன் என்று பாலிவுட்டின் டாப் நடிகர்கள் ஒன்றாக இணைந்து இப்படத்தில் நடித்திருப்பதால், 'சூர்யவன்ஷி' படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதையும் படிங்க: 'லால் சிங் சத்தா' பட அப்டேட்: மிலிட்டரி உடையில் ரசிகையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஆமீர் கான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.