ETV Bharat / sitara

அது ஒரு அழகிய நிலாக் காலம்... எங்கே கவிஞர் சினேகன்?

author img

By

Published : Jun 23, 2019, 2:52 PM IST

Updated : Jun 23, 2019, 4:32 PM IST

'பேருக்காக ஒரு ஆட்டம் காசுக்காக பல ஆட்டம் எட்டுக்காலில் போகும்போது ஊரு போடும் ஆட்டமே' என்ற ஒரு வரியில் ஒட்டுமொத்த மனிதர்களின் குரூர முகங்களை கிழித்தெறிந்திருப்பார் சினேகன்

snehan

அரசியலில் சிலர், விளையாட்டில் சிலர் என அனைத்துத் துறைகளிலும் சிலரது வெற்றிடம் எப்போதும் அப்படியே இருக்கும். அதுபோல் தமிழ் திரைப்பாடல்களில் கண்ணதாசன், வாலி, நா. முத்துக்குமார் என இவர்களின் வெற்றிடம் அப்படியே இருக்கிறது; இனிவரும் காலங்களிலும் இருக்கும். அந்த வரிசையில் கவிஞர் சினேகன் விட்டு வைத்திருக்கும் வெற்றிடமும் எப்போதும் அவருக்காகவே இருக்கும்.

பாடல்களைப் பொறுத்தவரை அலங்கார வார்த்தையோ, அகங்கார வார்த்தையோ இருந்தால் அது புயல் போல் நம்மை கடந்து சென்றுவிடும். உணர்வைத் தூண்டி, பால்யத்திற்கு கடத்தி லயிக்க வைக்கும் பாடல்கள்தான் தென்றல் போல் எப்போதும் நம்முடனே இருக்கும், நம்மை பழக்கும். அப்படித்தான் சினேகன் எழுதியப் பாடல்களும்.

கவிஞர் சினேகன்
கவிஞர் சினேகன்

பொதுவாக இந்த அவசர உலகத்தில் எதை நோக்கி ஓடுகிறோம், எதை நிரூபிக்க ஓடுகிறோம் என தெரியாமலேயே ஓடிக்கொண்டிருக்கும் இந்த நாட்களில் நமக்குள் எப்போதும் ஒரு எண்ணம் தோன்றும். சிறு வயது திருவிழா, கூட்டாஞ்சோறு, உறவுகளோடு கூடி பண்டிகைகளை கொண்டாடியது என அந்த நாட்களுக்கு செல்லவேண்டும் என்ற ஏக்கம் இப்போது அனைவரிடமும் இருக்கிறது.

அதனை பாடலில் வைத்தவர் சினேகன். ஆட்டோகிராஃப் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும், “ஞாபகம் வருதே ஞாபகம் வருதே” பாடலை கேட்டால் அந்த வரிகளில் நம்மை அமர்த்தி அந்த வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றவர்.

நமக்கு எப்போதும் நமது முதல் முறைகள்தான் முழுதான முதல். முதலுக்கு எப்போதும் தனித்துவம் உண்டு. அது நமக்கு கொடுக்கும் உணர்வு அலாதியானது. அப்படி, முதல் முறையாக சாமிக்கு பயந்தது, முதல் முறை ஆக்கிய கூட்டாஞ்சோறு, முதல் முறையாக பழகிய நீச்சல், முதல் முறையாக ஓட்டிய சைக்கிள், முதல் முறையாக வாங்கிய முத்தம் என நமது பல முதல் முறைகளை கெடுக்காமல் நமக்குள் பசுமையை போர்த்தியவர்.

முக்கியமாக நமக்கு முதல்முறையாக வகுப்பெடுத்த ஆசிரியரை நாம் கடைசி காலம் வரைக்கும் மறக்க மாட்டோம். அவர்கள் முகமும், குரலும் நமது கண்களில் தென்பட்டும், காதுகளில் கேட்டுக்கொண்டும் இருக்கும். அப்படி அதேப் பாடலில், 'முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சர்' என்ற ஒரு வரியை போகிற போக்கில் தூவி, நம் வாழ்க்கையை ஆரம்பித்த ஆரம்பப் பள்ளிகளில் நம்மை இப்போதும் அமரவைப்பார். ஞாபகங்கள் பொல்லாதது. ஆனால் சினேகனின் ஞாபகங்கள் நம்மை நாமே மீண்டும் பிரசவிக்கும் மகோன்னத நிலையை கொடுக்கக் கூடியது.

பாடலாசிரியர் சினேகன்
பாடலாசிரியர் சினேகன்

உறவுகள் எப்போதும் வலிமையானது. குறிப்பாக அண்ணன், தங்கை, தம்பி என கிராமத்து கூட்டுக் குடும்பங்கள் கொடுக்கும் தெம்பை வேறு எந்த விஷயமும் நமக்கு தராது. ஒரு அசம்பாவிதத்தால் ஊரைவிட்டே போன குடும்பம் மீண்டும் சொந்த கிராமத்திற்கு திரும்பி வந்து தங்களது தொலைந்துபோன காலத்தை கூறுவது போன்ற சூழலில் “அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்” என்ற வரியை முதல் வரியாக வைத்து அவர் எழுதிய ஒவ்வொரு வரியும் நாம் அனைவரும் தொலைத்த வாழ்க்கை.

அந்தப் பாடலில், “அது ஒரு அழகிய நிலாக் காலம் கனவினில் தினம் தினம் உலா போகும்; நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்” என்று ஒரு வரி எழுதியிருப்பார். இந்த வரியில்தான் தற்போது நாம் தொலைத்த வாழ்க்கையையும், நம்மை துளைத்துக் கொண்டிருக்கும் நாட்களையும் காது முன் நிறுத்தியிருப்பார்.

சினேகன் இப்படி ஒரு வரியை அமைத்திருப்பார், “சேகரித்து வைப்பதெற்கென்று தேவை என்று எதுவும் இல்லை”. இந்த வாழ்க்கையில் சேகரித்து வைப்பதற்கென்று உறவுகள், மனிதர்கள் தவிர வேறு எதுவும் தேவை இல்லை. அதை உணர்ந்தால் இந்த உலகத்தை அவசரமாக இயக்கிக் கொண்டிருக்கும் மனிதர்கள் அதை கொஞ்சம் நிதானமாக இயக்க ஆரம்பிப்பார்கள். சினேகன் இயக்க கற்றுக்கொடுப்பவர்.

சினேகன்
சினேகன்

தந்தைக்கு எப்போதும் ஒரு ஏக்கம், சோகம், அறமான கோபம் என அனைத்தும் இருக்கும். அதுவும் கிராமத்து தந்தைக்கு தன்னால் வளர முடியவில்லை, நினைத்ததை அடைய முடியவில்லை என்ற வடு சுடுகாட்டுக்கு போனாலும் அவரை சுட்டுக்கொண்டே இருக்கும். 'தவமாய் தவமிருந்து' திரைப்படம் தந்தையை சுற்றியே நகர்த்தப்பட்ட படம்.

அத்திரைப்படத்தில், “ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு அம்மா அப்பா ஒத்த புள்ள பெத்தாங்களே” என்ற பாடல் இப்போது வரை அனைத்து தந்தைகளின் பிடித்த பாடல்கள் லிஸ்ட்டில் முக்கியப் பங்கு வகிப்பது. சிறு வயதில் தந்தை நமக்கு என்னவெல்லாம் கற்றுக் கொடுத்தார், என்னவெல்லாம் கனவு கண்டார் என ஒற்றை பாடலில் தந்தையின் ஓராயிரம் உணர்வுகள் எவ்வித அலட்டலுமில்லாமல் எழுதியவர் அவர்.

தந்தையுடன் சினேகன்
தந்தையுடன் சினேகன்

'கவிஞர்களின் மை' கிராம வாழ்வியலையும், பால்ய நினைவுகளையும் பல முறை சிந்தியிருக்கிறது. ஆனால் சிலர் சிந்திய மைகள்தான் நம்முள் ஒட்டிக்கொண்டு நம்மை தூங்கவிடாமல் ஏதோ ஒன்று செய்யும். அப்படிப்பட்ட மைகளில் சினேகனின் மைக்கு தனி பக்கங்கள் உண்டு. எத்தனை காலத்திற்குத்தான் தாய் தனது மடியை நமக்கு கடனாக கொடுப்பார். தூக்கம் தொலைப்பார். ”தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து” என்று சினேகன் எழுதியது போல் நாம் நமது மடியையும், தூக்கத்தையும், தாய்களுக்கு கொடுப்பதே சாலச் சிறந்தது.

சினேகன்
சினேகன்

வாழ்க்கையில் யாரிடமோ நம்மை நாம் நிரூபிக்க ஆடும் ஆட்டம்தான் என்ன? அதில் எத்தனை பித்தலாட்டங்கள்; எத்தனை பேரின் உணர்வை நொறுக்குகிறோம் - அவமதிக்கிறோம். இந்த ஆட்டத்துக்கு கண்டிப்பாக முடிவு இருக்கும். அதை பொட்டில் அடித்தாற் போல் 'ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள' பாடலில், 'பேருக்காக ஒரு ஆட்டம் காசுக்காக பல ஆட்டம் எட்டுக்காலில் போகும்போது ஊரு போடும் ஆட்டமே' என்ற ஒரு வரியில் ஒட்டுமொத்த மனிதர்களின் குரூர முகங்களை கிழித்தெறிந்திருப்பார். குறிப்பாக, 'பருவம் பூக்கும் நேரத்தில் காதல் செய்ய போராட்டம் காதல் வந்த பின்னாலே போதை ஆட்டமே' என்ற அவரது எழுத்துகளில் தற்கால பெரும்பான்மையான காதல்களின் உண்மை நிலவரம் இருக்கத்தானே செய்கிறது. 'ஆடிய ஆட்டம் என்ன', 'போனால் போகட்டும் போடா' போன்ற தத்துவப் பாடல்களின் வரிசையில் சினேகனின் இந்தப் பாடலும் இடம்பெற்றிருக்கிறது. கண்ணதாசன் வரிசையில் சினேகன் அமர்ந்து நாட்களாகிவிட்டன.

சினேகன்
சினேகன்

நமது வாழ்க்கை எப்படிப்பட்டது தெரியுமா? அதன் உயிர் நாட்கள் எவ்வளவு தெரியுமா? நமக்கு அது குறித்து எதுவும் தெரியாது. போகிற போக்கில் நாமும் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் வாழ்க்கை என்ன, அதன் ஆயுள் எவ்வளவு என சினேகன் இப்படி சொல்லியிருக்கிறார், ”அருகம்புல்லின் மேலே ஏறி நிற்கும் பனி போல எத்தனை நாட்கள் வாழ்க்கை தெரியாதே”. ஆம், அருகம்புல் மேல் நிற்கும் பனி எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழலாம். அதுபோலதான் வாழ்க்கை. அதனால் இருக்கும்வரை அன்பு செய்வோம், மற்றொரு உயிருக்கு நம்மை தத்து கொடுப்போம். அவர் நமக்கு அறிவுரை கூறவில்லை, பாடம் நடத்தவில்லை. நம்முடைய சிநேகிதன் போல் சொல்லியிருக்கிறார் சினேகன்.

வாழ்க்கை குறித்த தத்துவங்களை தனது பாடல்களில் பெரும்பான்மையாக பயன்படுத்திய மிகச் சில கவிஞர்களில் சினேகத்தோடு புன்னகைத்து கொண்டிருப்பார் சினேகன். அவர் காதல் பாடல்கள் எழுதாமல் இல்லை. ஆனால் அவர் எழுதிய காதல் பாடல்களைவிடவும் சினேகன் என்ற பெயர் கேட்டதும் நாம் உணர்வது, வாழ்வியலுக்கும், உறவுகளுக்கும், அவர் எழுதியிருக்கும் பாடல்கள். அதனால்தான் அவர் இன்றும் தனித்துவமாக இருக்கிறார்.

சினேகன்
சினேகன்

நடிகர் சினேகனைவிட, அரசியல்வாதி சினேகனைவிட, பாடலாசிரியர் சினேகனை தற்போதைய இசையும், பாடலும் மிஸ் செய்து கொண்டிருக்கிறது. ஏனெனில், தற்போதைய பாடல்களில் சில பாடல்களை தவிர பல பாடல்களில் அலங்கார வார்த்தைகள் இருக்கிறேதே ஒழிய வாழ்க்கைக்கு துணையான வார்த்தைகள் அறவே இல்லை.

பொதுவாக கவிஞர்கள் எழுதும் வரிகள் அடுத்தவர்களின் வாழ்க்கைக்கு ஒத்துப் போவதுண்டு. சிலரிலும் சிலருக்குத்தான் அவர்கள் எழுதிய வரிகள் அவர்களுக்கே ஒத்துப்போகும். அந்த வகையில் சினேகன் பாடல் எழுதிய காலம் என்பது, அவர் எழுதியது போலவே, தமிழுக்கும், ரசிகர்களுக்கும் ”அது ஒரு அழகிய நிலாக் காலம்”.

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் மாற்றங்கள் வரும் சினேகன். அது உங்கள் வாழ்க்கையிலும் வந்துவிட்டதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், எங்கே கவிஞர் சினேகன் என உங்களைத் தேடி தமிழ் இன்னமும் காத்துக்கொண்டிருக்கிறது.... பிறந்தநாள் வாழ்த்துகள் சினேகன்!

Intro:Body:Conclusion:
Last Updated : Jun 23, 2019, 4:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.